Thottattil meyudhu veLLaippasu - pasuvum kandrum

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு

அங்கு துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி 

 

அம்மா என்றது வெள்ளைப்பசு 

உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி 

 

நாவால் நக்குது  வெள்ளைப்பசு 

பாலை நன்றாய்க்குடிக்குது கன்றுக்குட்டி 

 

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு 

மடி முட்டிக்குடிக்குடு கன்றுக்குட்டி