துட்டுத்தந்தால் லட்டு - Thuttu thanda lattu
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Azha. Valliappa - குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா
- Hits: 5589
வெங்கு, வெங்கு, வெங்கு
வெங்கு ஊதினான் சங்கு,
நுங்கு, நுங்கு, நுங்கு
நுங்கில் எனக்குப் பங்கு.
Vengu, vengu, vengu
vengu oodinaan sangu
nungu, nungu, nung
nungil enakku pangu
வள்ளி, வள்ளி, வள்ளி
வள்ளி, கொலுசு வெள்ளி
பள்ளி, பள்ளி, பள்ளி
பள்ளி செல்வோம் துள்ளி.
vaLLi, vaLLi, vaLLi
vaLLi, kolusu veLLi
paLLi, paLLi, paLLi
paLLi selvom thuLLi
பட்டு, பட்டு, பட்டு
பட்டு வாயில் பிட்டு.
துட்டு, துட்டு, துட்டு
துட்டுத் தந்தால் லட்டு!
pattu, pattu, pattu
pattu vaayil pittu
thuttu thuttu thuttu
thuttu thandaal lattu.